ADDED : ஆக 04, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், வெப்படை அருகே சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி, 45.
இவர், தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, நுாற்பாலைக்கு சொந்தமான வேனில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வெப்படை பகுதியில் வேன் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பார்வதியை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்தார். காயமடைந்த டிரைவர் சசிகுமார், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.