/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் நகர காங்கிரஸ் கூட்டம்
/
வெண்ணந்துார் நகர காங்கிரஸ் கூட்டம்
ADDED : ஆக 24, 2024 07:16 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில், காங்., நகர கூட்டம் தலைவர் சிங்காரம் தலை-மையில் நடந்தது. துணைத்தலைவர் முன்னிலை வகித்தார். செய-லாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில், வெண்ணந்துாரிலிருந்து, நாமக்கல் நகருக்கு சென்று வர நகர பஸ் இயக்க வேண்டும். விசைத்தறி, கைத்தறி ஜவுளிகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, வெண்ணந்துாரில் அரசு மகளிர் கலை கல்-லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வா-கிகள் கந்தசாமி, மோகன், நடராஜன், சுப்பிரமணியம், செங்-கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.