/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மினி டெக்ஸ்டைல் பார்க்' உருவாக்க நெசவாளர்கள் முன் வர வேண்டுகோள்
/
'மினி டெக்ஸ்டைல் பார்க்' உருவாக்க நெசவாளர்கள் முன் வர வேண்டுகோள்
'மினி டெக்ஸ்டைல் பார்க்' உருவாக்க நெசவாளர்கள் முன் வர வேண்டுகோள்
'மினி டெக்ஸ்டைல் பார்க்' உருவாக்க நெசவாளர்கள் முன் வர வேண்டுகோள்
ADDED : ஆக 08, 2024 06:32 AM
திருச்செங்கோடு: ''மினி டெக்ஸ்டைல் பார்க் உருவாக்க நெசவாளர்கள் முன் வர-வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா கேட்டுக்கொண்டார்.
பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, திருச்செங்-கோடு, சூரியம்பாளையம் செங்குந்தர் சமுதாய கூடத்தில், மருத்-துவ முகாம், சிறப்பு கைத்தறி கண்காட்சி நடந்தது. திருச்செங்-கோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிக்குமார் வர-வேற்றார். நகர்மன்ற தலைவர் நளினி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி, சிறப்பு கைத்தறி கண்காட்சியை திறந்து வைத்து, பொருள் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு கைத்தறி துறை, திருச்செங்கோடு மண்டலம் மூலம், பத்தாவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, 73 நெசவாளர்களுக்கு, 'முத்ரா' கடன் உதவி, மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தில், நான்கு பயனாளிகளுக்கு நிதி உதவி, விசைத்தறி கூடம் அமைத்தல், விசைத்தறி உபகர-ணங்கள், ஜக்கார்டு இயந்திரங்கள் என, மொத்தம், 103 பயனாளி-களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு, கடந்த ஓராண்டுக்கு முன், 'மினி டெக்ஸ்டைல் பார்க்' என்ற ஒன்றை துவங்கி உள்ளது. 5 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கி, அதில் மானியமாக, இரண்டரை கோடி ரூபாய் வழங்குகிறது. ஒரே குடும்பத்தை சேராத ரத்த வழி உறவு இல்-லாத, மூன்று பேர் இணைந்து, 15 ஏக்கர் நிலம் வாங்கி, 17 வகை-யான தொழில்கள் செய்ய இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்-ளது. நாமக்கல்லில் இதுவரை ஒருவர் கூட இதற்காக விண்ணப்-பிக்கவில்லை. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விண்ணப்-பங்கள் வந்துள்ளன. நெசவு தொழிலை பிரதானமாக கொண்-டுள்ள நாமக்கல் மாவட்டத்தில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 'மினி டெக்ஸ்டைல் பார்க்' உருவாக்க நெசவாளர்கள் முன் வர-வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்செங்கோடு நகர்மன்ற துணைத்தலைவர் கார்த்திகேயன், கவுன்சிர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.