/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலம் கட்டுமான இடத்தில் ஒளிரும் விளக்கு அமைக்கப்படுமா?
/
பாலம் கட்டுமான இடத்தில் ஒளிரும் விளக்கு அமைக்கப்படுமா?
பாலம் கட்டுமான இடத்தில் ஒளிரும் விளக்கு அமைக்கப்படுமா?
பாலம் கட்டுமான இடத்தில் ஒளிரும் விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : செப் 02, 2024 03:14 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்-தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வரு-கிறது. சேலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், கொங்கு மண்-டபம் அருகே, சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகிறது. இந்த இடத்தில் எச்சரிக்கை சிவப்பு விளக்கு அடிக்கடி பழுதாகி எரி-யாமல் உள்ளது.
இந்த இடத்தில் தான், ஒரு சர்வீஸ் சாலையிலிருந்து மற்றொரு சர்வீஸ் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை அமைக்கப்பட்-டுள்ளது. ஒளிரும் விளக்கு, இந்த இடத்தில் இல்லாததால், இரவு நேரத்தில் சேலம் பக்கமிருந்து
வரும் வாகனங்கள் நேராக கட்டு-மான பகுதிக்குள் புகுந்து விடும் அபாயமும், சாலையை கடக்கும் வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து நடக்கும் நிலையும் இருந்து வருகிறது. பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த இடத்தில்
எச்சரிக்கை ஒளிரும் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.