ADDED : செப் 17, 2024 07:38 AM
அ நிறம் | அளவு
வெண்ணந்துார்: வெண்ணந்துார் காங்., நகர கூட்டம், நேற்று நடந்தது. நகர தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். கூட்டத்தில், சமையல் எண்ணெய்க்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.சேலம் - கோயம்புத்துார் தேசிய நெடுஞ்சாலை, காக்காபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இதனால், பஸ் பயணிகளை தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விடுவதால், விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகளை காகாபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் இறக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
