ADDED : பிப் 12, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் தனியார் பள்ளி அருகே பெரிய ஆலமரம் உள்ளது. வெயிலில் சாலையில் செல்பவர்கள், இந்த மரத்தின் நிழலில் நிற்பது வழக்கம். இதனால், இப்பகுதியில் தர்பூசணி, முலாம்பழம், கரும்பு சாறு கடைகள் தற்காலிகமாக வைக்கப்படும்.
நேற்று மதியம், ஆலமரத்தின் அருகே கிடந்த குப்பை, சருகுகளில் திடீரென தீப்பிடிக்க துவங்கியது. காற்று அடித்ததால் தீ வேகமாக பரவியது. அருகில் இருந்த புதர்கள், காய்ந்த செடிகளில் தீ பற்றிக்கொண்டது. அவ்வழியாக சென்றவர்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.

