/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு
/
குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு
ADDED : பிப் 13, 2025 01:39 AM
குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு
குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'இளம் தலைமுறைக்கான தொழில் வாய்ப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்து பேசுகையில், ''இளைய சமுதாயத்தினர் சிறந்த தொழில் முனைவோராக மாற, தொழில் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என்றார்.
தர்மபுரி அரசு கலை கல்லுாரி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் வேலவன், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி பேராசிரியர் ஹரிதாஸ் ஆகியோர் பேசுகையில், ''சிறிய அளவில் தொழில் துவங்குங்கள். அதற்கு மூலதனம் பயம், போட்டி, அனுபவமின்மை ஆகியவை பிரச்னைகளாக இருந்தாலும், எளிதில் அவற்றை கடந்து மீண்டு வர முடியும்,'' என்றனர். பேராசிரியர்கள் ரகுபதி, காயத்ரி, அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.