நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனப்பகுதியில் தீ
வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, பழந்தின்னிப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் நெடுஞ்சாலையில், குண்டுமலை பெருமாள் கோவில் கரடு பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம், வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த இடத்தை, ராசிபுரம் வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில், வெயில் காரணமாக மரம், செடிகொடிகள், புற்கள் காய்ந்து காணப்பட்டன. அதில், நேற்று மாலை, திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த ராசிபுரம் வனத்துறையினர் தீயை அணைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.