ADDED : ஏப் 02, 2025 01:49 AM
சிறப்பு பூஜையுடன் புதுக்கணக்கு
நாமக்கல்,:பல்வேறு வர்த்தக நிறுவனத்தினர், நடப்பாண்டுக்கான புதுக்கணக்கை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவக்கினர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும், தமிழ் மாதம் முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
நேற்று ஏப்ரல், 1ல் வர்த்தக நிறுவனங்கள் இந்தாண்டுக்கான புதுக்கணக்கை சிறப்பு பூஜை செய்து துவக்கினர். நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் ஏஜன்சிஸ், முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள், லாரி தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசு, தனியார் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திரண்டனர். அங்கு சுவாமி பாதத்தில், கணக்கு நோட்டுகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

