/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில்மின் குறைதீர் முகாம்
/
திருச்செங்கோட்டில்மின் குறைதீர் முகாம்
ADDED : ஏப் 06, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோட்டில்மின் குறைதீர் முகாம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், கீழேரிப்பட்டி மின் பகிர்மான கழக அலுவலகத்தில் நடந்தது. திருச்செங்கோடு செயற்பொறியாளர் முருகன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், மின் கட்டண குறை, மின் மீட்டர்கள் குறைபாடு, குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுவை பொதுமக்கள் வழங்கினர். உதவி செயற்பொறியாளர்கள் யோகநாதன், ரவிச்சந்திரன், அமுதா, அன்பழகன், காந்திமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

