ADDED : ஏப் 09, 2025 01:51 AM
அ நிறம் | அளவு
வாழைக்கன்று நடவுமுறைவிவசாயிகளுக்கு பயிற்சி
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில், நாமக்கல் பி.ஜி.பி., வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், கிராமப்புற அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அங்குள்ள வாழை விவசாய தோட்டத்தில், வாழை மரங்களின் நிலையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வாழையில் பக்க கன்று நடவு சிகிச்சை முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். இந்த பக்க கன்று நடவு சிகிச்சை மூலம், நுாற்புழு, சருகு நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தலாம். மேலும், விவசாயிகள், மாணவர்களிடம் களை மேலாண்மை மற்றும் உர மேலாண்மை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
