ADDED : ஆக 09, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் மலைகுன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று ஆடி மாத பவுர்ணமி தினத்தையொட்டி, மாலை, 5:30 மணி முதல் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
இரவு, 7:00 மணிக்கு, மலைமீது உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, அடிவார மண்டபத்தில் உற்சவமூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு வகை மூலிகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.