நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்,குமாரபாளையத்தில் அரசு மது பானங்களை, சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார், ஆனங்கூர் சாலை, கல்லங்காட்டுவலசு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த வளர்மதி, 42, என்பவரை பிடித்து, 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

