ADDED : நவ 14, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மானாவாரியாகவும், பாசன முறையிலும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். தற்போது, அனைத்து மில்களிலும் அரவை தொடங்கியுள்ளது. இதையடுத்து, விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள மரவள்ளி கிழங்கை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மரவள்ளி கிழங்கு பாயின்ட்டுக்கு, 255 முதல், 260 ரூபாய் வரை கிடைக்கிறது. சராசரியாக ஒரு மூட்டை கிழங்குக்கு செலவு போக, 450லிருந்து, 470 ரூபாய் வரை கிடைக்கும். பண்டிகை முடிந்ததால் விலை, 550 ரூபாய் வரை கிடைக்கும் என, எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், நீண்ட நாட்கள் கிழங்கை அறுவடை செய்யாமல் வைத்திருக்க முடியாது என்பதால், சுறுசுறுப்பாக அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.

