ADDED : மார் 26, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள பழமைவாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவிலில், புதிதாக கட்டப்பட்டுள்ள சப்தகன்னிமார்கள் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக, நேற்று முன்தினம் காலை, 7:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை விநாயகர் பூஜை, காவிரியாற்றில் புனித தீர்த்தக்குடம் எடுத்து வருதல், வாஸ்துசாந்தி, முதல்கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, காயத்திரி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர
கலசங்கள் பிரதிஷ்டை நடந்தது.
நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, சப்த கன்னிமார்கள் விமானம் மற்றும் விக்ரஹங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோபூஜை, மகா அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.
