ADDED : ஏப் 15, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
நாமக்கல் :நாமக்கல், ரெட்டிப்பட்டி, கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டார் கோவிலில், திருப்புகழ் திருப்படி திருவிழா குழு சார்பில், தமிழ் புத்தாண்டையொட்டி, சித்திரை முதல்நாள் திருவிழா ஒவ்வெரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி, 66ம் ஆண்டு திருப்படி திருவிழா, நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு மலைக்கோவில் படிகளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின், சுவாமிக்கு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது.
