ADDED : ஏப் 16, 2026 05:53 AM
நாமக்கல் :நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 505 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 565, ஐதராபாத், 520, விஜயவாடா, 560, பர்வாலா, 530, மும்பை, 575, மைசூரு, 580, பெங்களூரு, 565, கோல்கட்டா, 590, டில்லி, 555 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 92 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 105 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
