ADDED : ஏப் 28, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம் : சித்திரை திருவிழாவையொட்டி, சேந்தமங்கலம் அடுத்துள்ள அண்ணா நகர் முத்து மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு முதல் காப்பு கட்டப்பட்டது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புத்துக்கண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
