ADDED : மே 19, 2026 01:54 AM

அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், கொல்லிமலைக்கு செல்லும் வழியில் உள்ள வெண்டாங்கி கிராமத்தில் ஜோதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன், காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், பூஜைகள் நடந்து வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம், நடந்தது.சாமி காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில், காளை மாடுகள் முன்னே சென்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றன.
தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, பொங்கல் மாவிளக்கு பூஜையும், தொடர்ந்து கிடா வெட்டு பூஜையும் நடைபெற உள்ளது.
