ADDED : மே 21, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம், ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை, இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி ஒன்று பஞ்சராகி நின்றது. அப்போது, சிமென்ட் கலவை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று, நின்றிருந்த லாரி மீது மோதியது.
இதில், சிமென்ட் கலவை லாரி டிரைவரான அர்த்தனாரீஸ்வரன், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
