ADDED : மே 23, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தில், காலை நேரத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு, மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் உத்தரவுப்படி, எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையில் போலீசார் பாண்டமங்கலம் பகுதியில், நேற்று காலை சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த நாகராஜ், 41, மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை, ப.வேலுார் எஸ்.ஐ., சாந்தகுமார் கைது செய்து அவரிடம் இருந்த, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது விற்பனை செய்த நாகராஜ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
