ADDED : ஜூன் 04, 2026 04:42 AM

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
யூனியன், மரப்பரை பஞ்., கருக்குவலவு, தென்னமரத்துபாளையம்,
கட்டையன்காடு, கட்டபாளையம், செங்கோடன்பாளையம் உள்ளிட்ட பகுதி
மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்
ஆண்டுக்கு, ஐந்து நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. எனவே,
ஆண்டுக்கு, 100 நாள் கட்டாயம் வேலை வழங்க வேண்டும். கட்டிபாளையம்,
கருக்குவலவு பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்னையை சரிசெய்து
சீரான குடிநீர் வழங்க வேண்டும். கட்டிப்பாளையம் நாடார் தெரு பகுதியில்
கோழிப்பண்ணை மூலம் அதிகளவில் ஈக்கள் நிரம்பி காணப்படுகிறது.
சுகாதாரத்துறை
அதிகாரிகள் முறையான ஆய்வுமேற்கொண்டு ஈக்களை கட்டுப்படுத்த
வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று
மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய
தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,
பி.டி.ஓ., சரவணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்
ஜெயராமன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட
செயலாளர் அன்புமணி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
