தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 19, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார், சென்னை மாநகராட்சி உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருககு பதிலாக திருவண்ணாமலை மாநகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த, செல்வ பாலாஜி நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாநகராட்சியில், அரசின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி வளர்ச்சிக்காக நிர்வாகம் எடுக்கக் கூடிய நடவடிக்கைக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

நாமக்கல் மாநகராட்சி குப்பை இல்லாத நகரம் என்ற பெயரை பெற்று விருது பெற்றுள்ளது. அந்த விருதை தொடர்ந்து தக்க வைக்கவும், மத்திய, மாநில அரசுகள் மூலம் சிறந்த மாநகராட்சி நிர்வாகம் என்ற விருதை பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். புதிய கமிஷனருக்கு மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us