தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நிழற்கூடத்தை ஆக்கிரமித்த 'குடி'மகன்கள்

நிழற்கூடத்தை ஆக்கிரமித்த 'குடி'மகன்கள்

நிழற்கூடத்தை ஆக்கிரமித்த 'குடி'மகன்கள்


ADDED : ஜூலை 12, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:காவிரி பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடம், 'குடி'மகன்கள் மது குடித்துவிட்டு அலங்கோலமாக படுத்துக்கிடக்கும் இடமாக மாறியதால், பயணிகள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

பள்ளிப்பாளையம் அடுத்த காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்கூடம் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து தினமும் மாணவர்கள், பொதுமக்கள் என, ஏராளமான பயணிகள் பஸ்சில் சென்று வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக இருக்கை வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த நிழற்கூடம், 'குடி'மகன்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். எந்நேரமும், 'குடி'மகன்கள் கும்பலாக அமர்ந்து கும்மாளம் போடுகின்றனர். நிழற்கூடத்திலேயே மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறியவுடன், நிழற்கூடத்தின் இருக்கையை ஆக்கிரமித்து ஆளுக்கொரு திசையில் படுத்துக்கிடக்கின்றனர். பயணிகள் நிழற்கூடத்திற்குள் சென்றால், சத்தம் போடுவது, திட்டுவது, தகாத வார்த்தையில் பேசுவது உள்ளிட்ட செயல்களால் அச்சமடைகின்றனர். அந்தளவுக்கு நிழற்கூடத்தை குடிகாரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, நிழற்கூடத்தை ஆக்கிரமித்துள்ள, 'குடி'மகன்களை, பள்ளிப்பளையம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us