ADDED : ஜன 18, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன தணிக்கை ரூ.10,000 அபராதம்
மல்லசமுத்திரம்,:மல்லசமுத்திரம், வையப்பமலை சாலையில் நேற்று, எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் அதிவேகமாக சென்றது, செல்போன் பேசிக்கொண்டு சென்றது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஒரே வாகனத்தில் மூன்று பேர் சென்றது என, 10 பேரிடம், தலா, 1,000 வீதம், 10,000 ரூபாய் அபராதம் விதித்து, அறிவுரை வழங்கப்பட்டது.