ADDED : பிப் 20, 2025 01:31 AM
அ நிறம் | அளவு
ரூ.12 லட்சத்திற்குபருத்தி விற்பனை
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் புதன்கிழமையன்று, பருத்தி ஏலம் நடந்து வருகிறது. இதில், சூரியகவுண்டம்பாளையம், பீமரப்பட்டி, ராமாபுரம், மேல்முகம், காளிப்பட்டி, கொளங்கொண்டை, மங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடையுள்ள, 500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், பி.டி., ரகம் குவிண்டால், 8,113 ரூபாய் முதல், 8,465 ரூபாய்; கொட்டுபருத்தி, 3,260 ரூபாய் முதல், 4,830 ரூபாய் என, மொத்தம், 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. வெளியூர் வியாபாரிகள் கலந்துகொண்டனர். அடுத்த ஏலம் வரும், 26ல் நடக்கிறது.
