ADDED : மார் 15, 2025 02:49 AM
அ நிறம் | அளவு
ரூ.1.30 லட்சத்திற்குகொப்பரை விற்பனை
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் சூரியகவுண்டம்பாளையம், மேல்முகம், மரப்பரை, ராமாபுரம், பருத்திப்பள்ளி, மங்களம், காளிப்பட்டி, பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, துத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள், 60 கிலோ எடையுள்ள, 30 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
முதல் தரம் கிலோ, 127.80 ரூபாய் முதல், 144.10 ரூபாய்; இரண்டாம் தரம், 104.70 ரூபாய் முதல், 120.80 ரூபாய் என, மொத்தம், 1.30 லட்சம் ரூபாய் ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 21ல் நடக்கிறது.
