நாய்கள் கடித்து 14 பேர் காயம்கூண்டு வைத்து பிடித்த நகராட்சி
நாய்கள் கடித்து 14 பேர் காயம்கூண்டு வைத்து பிடித்த நகராட்சி
ADDED : ஏப் 11, 2025 01:15 AM
அ நிறம் | அளவு
நாய்கள் கடித்து 14 பேர் காயம்கூண்டு வைத்து பிடித்த நகராட்சி
இடைப்பாடி:இடைப்பாடி நகராட்சி க.புதுாரில், இரு தெருநாய்கள் நேற்று காலை மக்களை விரட்டி, விரட்டி கடித்தன. 3 பெண்கள் உள்பட, 14 பேர் காயம் அடைந்தனர். இதை அறிந்து, நகராட்சி அதிகாரிகள், க.புதுாரில் கூண்டுகள் வைத்து இரு நாய்களையும் பிடித்தனர். பின் இடைப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சந்திரமோகன் முகாமிட்டு, நாய் கடிபட்டவர்களுக்கு முதலுதவி அளித்தனர். அதிக காயம் அடைந்த, 12 பேர் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
