/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி வாகனத்திற்குரூ.15,000 அபராதம்
/
பள்ளி வாகனத்திற்குரூ.15,000 அபராதம்
ADDED : பிப் 27, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி வாகனத்திற்குரூ.15,000 அபராதம்
பள்ளிப்பாளையம்:குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், நேற்று மாலை, பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த, ஈரோட்டை சேர்ந்த தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், தகுதிச்சான்று புதுப்பிக்கவில்லை, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லை என, கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்திற்கு, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மொபைல் போனில் பேசியபடி டூவீலர் ஓட்டிச்சென்ற, 5 பேருக்கு, 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.