/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஞ்சள் வரத்து 2 மடங்கு உயர்வுஒரே நாளில் ரூ.1.08 கோடிக்கு ஏலம்
/
மஞ்சள் வரத்து 2 மடங்கு உயர்வுஒரே நாளில் ரூ.1.08 கோடிக்கு ஏலம்
மஞ்சள் வரத்து 2 மடங்கு உயர்வுஒரே நாளில் ரூ.1.08 கோடிக்கு ஏலம்
மஞ்சள் வரத்து 2 மடங்கு உயர்வுஒரே நாளில் ரூ.1.08 கோடிக்கு ஏலம்
ADDED : ஏப் 02, 2025 01:49 AM
மஞ்சள் வரத்து 2 மடங்கு உயர்வுஒரே நாளில் ரூ.1.08 கோடிக்கு ஏலம்
நாமகிரிப்பேட்டை,:நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த, நான்கு வாரங்களுக்கு முன் மஞ்சள் வரத்து தொடங்கியது.
சீசன் தொடங்கிய முதல் வாரம், 179 மஞ்சள் மூட்டை வரத்தாகி, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின. நேற்று விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 10,265 ரூபாய்க்கும், அதிகபட்சம், 16,373 ரூபாய்க்கும் விற்பனையானது.
உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,001 ரூபாய்க்கும், அதிகபட்சம், 13,819 ரூபாய்க்கும் விற்பனையானது. பனங்காலி, 4,500 ரூபாயிலிருந்து, 27,369 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 1,020, உருண்டை, 387, பனங்காலி, 70 என, 1,477 மூட்டைகள், 1.08 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின.