/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணம் பறிக்க முயற்சி2 வாலிபர்கள் கைது
/
பணம் பறிக்க முயற்சி2 வாலிபர்கள் கைது
ADDED : மார் 25, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் பறிக்க முயற்சி2 வாலிபர்கள் கைது
மோகனுார்:மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டியில், தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு சென்ற இருவர், பணியில் இருந்த ஊழியர்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றனர்.
அப்போது, அவர்கள் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டு, இரண்டு பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, மோகனுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், எருமப்பட்டி ஒன்றியம், திப்ரமகாதேவியை சேர்ந்த பிரசாந்த், 27, பெயின்டர் சந்ரு, 24, என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.