/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 4,528 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 4,528 மாணவ, மாணவியர் பங்கேற்பு
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 4,528 மாணவ, மாணவியர் பங்கேற்பு
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 4,528 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : பிப் 23, 2025 04:05 AM
நாமக்கல்: மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில், 4,528 பேர் பங்கேற்றனர். 116 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும், தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஏழாம் வகுப்பில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பதோடு, பெற்றோர் ஆண்டு வருமானம், 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 12,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்-படும். அதன்படி, இந்தாண்டுக்கான தேசிய வருவாய் வழி திற-னாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும், நேற்று நடந்தது.நாமக்கல் மாவட்டத்தில், இத்தேர்விற்காக, 4,644 மாணவ, மாண-வியர் விண்ணப்பித்திருந்தனர். அதற்காக, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ப.வேலுார், சேந்தமங்கலம் என, ஆறு தாலுகாவில், 17 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வில், மாவட்டம் முழுவதும், 4,528 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, மாதம், 1,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, மொத்தம், 12,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

