/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வள்ளலார் சன்மார்க்கத்தில்7 திரை நீக்கி ஜோதி தரிசனம்
/
வள்ளலார் சன்மார்க்கத்தில்7 திரை நீக்கி ஜோதி தரிசனம்
வள்ளலார் சன்மார்க்கத்தில்7 திரை நீக்கி ஜோதி தரிசனம்
வள்ளலார் சன்மார்க்கத்தில்7 திரை நீக்கி ஜோதி தரிசனம்
ADDED : பிப் 12, 2025 01:13 AM
வள்ளலார் சன்மார்க்கத்தில்7 திரை நீக்கி ஜோதி தரிசனம்
நாமக்கல்:வடலுார் வள்ளலாரின், 154வது தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியில் உள்ள வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை வளாகத்தில், மூன்றாமாண்டாக, ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் மற்றும் பசியாற்றுவித்தல் பெருவிழா நடந்தது.
அதையொட்டி, நேற்று முன்தினம் கொடிகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு கருப்புத்திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை மற்றும் கலப்புத்திரை எனும், ஏழு மாயத்திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 11:00 மணிக்கு திருவருட்பா இசை கச்சேரியும், தொடர்ந்து பக்தர்களுக்கு தைப்பூச பசியாற்றுவித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
* தைப்பூச விழாவான நேற்று, வள்ளலார் மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. ராசிபுரம், 1வது வார்டு பகுதியில் உள்ள வள்ளலார் மடத்தில், வடலுாரை போல், ஏழு திரைகளை அகற்றி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில், நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அறக்கட்டளை தலைவர் நல்லதம்பி, பொருளாளர் சுந்தரம் ஆகியோர் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜோதி வழிபாட்டிற்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.