குமாரபாளையம் தொகுதியில் 74.06 சதவீதம் ஓட்டுப்பதிவு
குமாரபாளையம் தொகுதியில் 74.06 சதவீதம் ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 21, 2024 10:43 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்: ஈரோடு லோக்சபா தொகுதியில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிப்பாளையம் என, இரு நகராட்சிகளை உள்ளடக்கியுள்ளது.
தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் வினியோகம், உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது.இதுகுறித்து, தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:
குமாரபாளையம் தொகுதியில், 2 லட்சத்து, 57,740 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 74.06 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
