/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி
/
சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி
சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி
சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி
ADDED : செப் 02, 2024 03:14 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, பழுதாகி சாலையில் நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் டிரைவர் பலியானார்.
திருச்சி, சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 37; சரக்கு வாகன டிரைவர். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கதிர்வேல், 22, அல்லி முத்து மகன் நாகேந்திரன், 23, கோபால் மகன் விக்னேஷ்வரன், 34,
ராஜேந்திரன் மகன் மதன்குமார், 24, ராஜா மகன் நவீன் குமார், 27; ஆறு பேரும் பெங்களூருக்கு சமையல் வேலைக்கு சென்றனர்.வேலை முடிந்து சரக்கு வாகனத்தில் திருச்சிக்கு நேற்று முன்-தினம் இரவு புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மசக்காளிப்பட்டி அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது செங்கல் லோடுடன் பழுதாகி சாலையில் நின்ற
லாரியின் பின்-புறம் சரக்கு வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆறு பேரையும் அருகிலிருந்த-வர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார். மற்ற ஐந்து பேரும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்-கப்பட்டனர். இதுகுறித்து வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்.