sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரிப்பு மகசூல் இழப்பை தவிர்க்க வேளாண் அதிகாரி 'டிப்ஸ்'

/

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரிப்பு மகசூல் இழப்பை தவிர்க்க வேளாண் அதிகாரி 'டிப்ஸ்'

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரிப்பு மகசூல் இழப்பை தவிர்க்க வேளாண் அதிகாரி 'டிப்ஸ்'

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரிப்பு மகசூல் இழப்பை தவிர்க்க வேளாண் அதிகாரி 'டிப்ஸ்'


ADDED : ஆக 26, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'மக்காச்சோள பயிரில் தாக்கிய பூச்சிகளை கட்டுப்படுத்தினால், மகசூல் இழப்பை தவிர்க்கலாம்' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பேபிகலா தெரிவித்-துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்-டத்தில், நடப்பாண்டில் அனைத்து வட்டாரங்களிலும், 3,415 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்-ளது.

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால், 30--50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால், உரிய தருணத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்-கொண்டு பயனடைய வேண்டும்.

கோடை உழவு செய்தல்

கோடை உழவு செய்வதால், மண்ணில் உள்ள படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அழிக்கப்படும்.

கடைசி உழவு செய்யும்போது, ஒரு ஹெக்டேருக்கு, 250 கிலோ தரமான வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் மூலம், கூட்-டுப்புழுக்களை கட்டுப்படுத்தி அந்து பூச்சி வெளிவருவது தடுக்-கப்படுகிறது.

விதை நேர்த்தி

ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் தயோ மீதாக்சம், 30 சதவீதம் எப்.எஸ்., அல்லது 6 மி.லி., சயான்டிரினிபுரேல், 19.8 சதவீதம் எப்.எஸ்., கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம், விதைத்த 15 முதல், 20 நாட்கள் வரை படைப்புழுவின் புழுக்கள் அதன் இளம் பருவத்திலேயே பரவு-தலை தடுக்க இயலும்.

சூரிய விளக்குப்பொறி வைத்தல் மக்காச்சோள படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகள் வயலில் உள்ளதா என்பதை கண்காணிக்க, விதைத்தவுடன் சூரிய விளக்கு பொறி ஹெக்டேருக்கு, ஒன்று மற்றும் இனக்கவர்ச்சி பொறி ஹெக்டேருக்கு, 12 வைத்து கண்காணிக்கலாம்.

தாய் அந்து பூச்சிகளை அதிக அளவு கவர்ந்து கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சி பொறி ஹெக்டேருக்கு, 50 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

ஊடுபயிர் பயிரிடுதல் இயற்கை ஒட்டுண்ணி மற்றும் இரை விழுங்கிகளை ஊக்குவிக்க, குறுகிய காலப்பயிர்களான தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயர்களை வரப்பு பயிராகவும், உளுந்து மற்றும் பாசி பயிர்களை ஊடுபயிராகவும் பயிரிட வேண்டும். இதனால், நன்மை செய்யும் பூச்சிகள் அதிகமாக கவரப்பட்டு படைப்புழுக்கள் முட்டை குவியல் மற்றும் இளம் புழுக்கள் அழிக்கப்பட்டு தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

பயிர் நிலை மற்றும் படைப்புழு தாக்குதலை பொறுத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்காச்சோளப்பயிரில் தாக்கிய பூச்சிகளை கட்டுப்படுத்தினால், மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us