ADDED : ஆக 01, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் கொக்கராயன்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்-டிருந்தனர். அப்போது, ராமமூர்த்தி, 45, என்பவர், வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். மொளசி போலீசார் ராமமூர்த்-தியை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த சாராயம், 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.