/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'போதை' ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
'போதை' ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 26, 2024 02:43 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை பொருளுக்கு எதிரான மற்றும் போதை பொருளிலிருந்து இளைய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிளை செயலாளர் நவீன் பாஷா தலைமை வகித்தார்.
கொக்கராயன்பேட்டை மேற்கு வீதியில் தொடங்கிய பேரணி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, வடக்கு வீதி, வழியாக கொக்கராயன்-பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது. ஊர்வ-லத்தில், போதையின் பிடியில் சிக்கி தவிக்கும் சமுதாயத்தை மீட்-டெடுப்போம். போதை பொருள்களை பயன்படுத்த வேண்டாம். போதை பழக்கம் போதை பொருளுக்கு எதிராக அணி திரள்வோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்-பினர்.

