/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
/
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஆக 08, 2024 01:36 AM
நாமக்கல், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், பகடிவதை ஒழிப்புக்குழு மற்றும் உள்தர உறுதி மையம் சார்பில், 'பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு' கருத்தரங்கம், நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பகடிவதை ஒழிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், பகடிவதை என்பது என்ன, போலீஸ் துறையின் வழக்கு, தண்டனை, மாணவ, மாணவியர் பகடிவதை தவிர்த்து எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமாக பழகுவது என்பது குறித்து பேசினார். பகடிவதை ஒழிப்புக்குழு உறுப்பினர் வேலுசாமி, பேராசிரியர்கள் தங்கவேலு, நாகரத்தினம், அன்பழகன், வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.