/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி பட்ட நெற்பயிரில் மகசூல் குறைவால் கவலை
/
புரட்டாசி பட்ட நெற்பயிரில் மகசூல் குறைவால் கவலை
ADDED : மார் 04, 2025 06:14 AM
எருமப்பட்டி: கொல்லிமலை அடிவாரமான சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்-பட்டி, எருமப்பட்டி யூனியனில், கடந்தாண்டு நல்ல மழை பெய்-தது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்-மட்டம் உயர்ந்தது. இதையொட்டி, புரட்டாசி பட்டமாக, 5,000 ஹெக்டேர் பரப்பளவில் அட்சயா பொன்னி, துாய பொன்னி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட ரக நாற்றுகள் நடவு செய்தனர். இந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி, தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஆனால், கடந்த முறை, ஒரு ஏக்கருக்கு, 35 மூட்டை நெல் கிடைத்த நிலையில், இந்தாண்டு, மகசூல் இன்றி, 25 மூட்டை-யாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்-ளனர்.இதுகுறித்து, கைகாட்டியை சேர்ந்த விவசாயி மணி கூறுகையில், ''பொட்டிரெட்டிப்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில், புரட்டாசி மாத பட்டத்தில், அட்சயா பொன்னி நெல் ரகம் பயிரி-டப்பட்டது. தற்போது, அறுவடை முடிந்துள்ளது. ஆனால், மகசூல் முற்றிலும் குறைந்து, 25 மூட்டை நெல் கூட முழுமை-யாக வரவில்லை,'' என்றார்.