நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில், நேற்று காலை, 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழி-யாக சென்றவர்கள், நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரி-வித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் நாமக்கல் செம்பாளிகரடு பகுதியை சேர்ந்த ராஜலிங்கம், 55, என்-பதும், கட்டட தொழிலாளியான அவர், அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்ததும்
தெரியவந்தது.