/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'டிசைன் ஹேக்கத்தான்-24' போட்டி
/
மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'டிசைன் ஹேக்கத்தான்-24' போட்டி
மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'டிசைன் ஹேக்கத்தான்-24' போட்டி
மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'டிசைன் ஹேக்கத்தான்-24' போட்டி
ADDED : மார் 25, 2024 01:13 AM
நாமக்கல்:நாமக்கல்
மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் பெண் பொறியாளர்களுக்கான, 'டிசைன்
ஹேக்கத்தான்-24', டசால்ட் சிஸ்டம்ஸ், தமிழ்நாடு மேம்பட்ட
உற்பத்திக்கான சிறப்பு மையம், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், மஹேந்ரா கல்வி
நிறுவனங்களுடன் இணைந்து, இந்த புதுமையான வடிவமைப்பு குறித்த
போட்டியை நடத்தின.
கல்லுாரி தலைவர் பாரத்குமார் தலைமை வகித்தார்.
இதில், 1,000க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவியர், தங்களது
படைப்புகளை காட்சிப்படுத்தினர்.டசால்ட் சிஸ்டம்ஸ் துணைத்தலைவர்
ரவிக்குமார், டான் காம் முதன்மை இயக்க அலுவலர் விஜயதீபன், ஹெக்ஸாவேர்
டெக்னாலஜீஸ் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர், சிறந்த படைப்புகளுக்கு
முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழை, பண்ணாரி அம்மன்
தொழில்நுட்பக் கல்லுாரி, மஹேந்ரா பொறியியல் கல்லுாரி மாணவியருக்கு
பகிர்ந்தளித்தனர். 2ம் பரிசு, கே.பி.ஆர்., தொழில்நுட்பக் கல்லுாரி,
கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
கல்லுாரி
மேலாண் இயக்குனர் மஹா அஜய் பிரசாத், செயல் இயக்குனர் சாம்சன்
ரவீந்திரன், கல்லுாரி முதல்வர் மஹேந்ர கவுடா, ஒருங்கிணைப்பாளர்கள்
தவமணி, வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

