/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை: 16 வரை நீட்டிப்பு
/
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை: 16 வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை: 16 வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை: 16 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 06, 2024 02:30 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024--2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயில விரும்புவோர், கல்வி, ஜாதி, மாற்றுச்சான்று, ஆதார் அட்டை, புகைப்படம் கொண்டுவந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக சேரலாம். 14 முதல், 40 வயது வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மாதம், 750 ரூபாய் கல்வி உதவித்தொகை. விலையில்லா சீருடை, பாட புத்தகம், வரைபடக்கருவிகள், காலணி ஒரு ஜோடி, மிதிவண்டி, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய்- உதவித்தொகை, கட்டணமில்லா பஸ் உள்ளிட்ட அரசின் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு, நாமக்கல், கொல்லிமலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலோ அல்லது 9499055843, 9499055846 என்ற மொபைல் எண்ணிலும், 04286-299597, 04286-247472 ஆகிய தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.