/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகுதி நேர வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.33.88 லட்சம் மோசடி
/
பகுதி நேர வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.33.88 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.33.88 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.33.88 லட்சம் மோசடி
ADDED : ஆக 03, 2024 01:35 AM
நாமக்கல், ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம், 33.88 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த கொந்தளத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன் மனைவி ரேவதி, 39. அவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில், 'டேட்டா என்ட்ரி' ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு, பகுதிநேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், 'குறிப்பிட்ட ஒரு வலைதளத்தை திறந்து, டாஸ்க் செய்தால் கணிசமான அளவு கமிஷன் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவற்றை உண்மை என நம்பிய ரேவதி, 26 முறை கொஞ்சம், கொஞ்சமாக, ரூ.34 லட்சத்து, 65,000 ரூபாய் செலுத்தியுள்ளார். இதில் கமிஷன் தொகை, 77,000 ரூபாய் மட்டுமே திரும்ப வந்துள்ளது. மீதமுள்ள, 33.88 லட்சம் ரூபாய் கிடைக்கவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ரேவதி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புகார்படி, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 'இதுபோன்று டாஸ்க் செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என, வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.