/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி கிலோ ரூ.700க்கு விற்பனை
/
குண்டுமல்லி கிலோ ரூ.700க்கு விற்பனை
ADDED : ஆக 15, 2024 01:47 AM
எருமப்பட்டி, -
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி பூக்கள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
தினமும் வருமானம் தரக்கூடிய இந்த பூக்களை பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டிற்கு, ஏலத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த, ஒரு வாரமாக விசேஷ நாட்கள் இல்லாததால், குண்டுமல்லி கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று சுதந்திர தினம், நாளை வரலட்சுமி விரதத்தையொட்டி, நேற்று நடந்த பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி பூ விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.