/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஐ.ஜி., சோதனை
/
நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஐ.ஜி., சோதனை
ADDED : மார் 25, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:பரமத்தியில்,
தமிழக நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இங்கு, நேற்று
முன்தினம், சென்னை குடிமைப்பொருள் வழங்கல்,
குற்றப்புலனாய்வுத்துறை ஐ.ஜி., ஜோதி நிர்மல் குமார் தலைமையிலான
அதிகாரிகள் வந்தனர்.
தொடர்ந்து, பொது வினியோக திட்டத்தில் உணவு
பொருட்களை ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வது குறித்து சோதனை
மேற்கொண்டனர். கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்க துறை எஸ்.பி.,
சந்திரசேகரன், ஈரோடு சரக குடிமைப்பொருள் வழங்கல் துறை டி.எஸ்.பி.,
சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், எஸ்.ஐ., ஆறுமுக நாயனார்
ஆகியோர் உடனிருந்தனர்.

