/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை மெஹபூபா முப்தி அறிவிப்பு
/
காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை மெஹபூபா முப்தி அறிவிப்பு
காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை மெஹபூபா முப்தி அறிவிப்பு
காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை மெஹபூபா முப்தி அறிவிப்பு
ADDED : ஆக 29, 2024 02:13 AM
ஸ்ரீநகர், ஆக. 29---
''அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 விவகாரத்தில் கட்சியின் கொள்கையை நிறைவேற்ற முடியாது என்பதால், சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை,'' என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்., 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி நேற்று கூறியதாவது: நான் கடந்த 2016ல் பா.ஜ., கூட்டணியில் முதல்வராக இருந்தபோது, 12,000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றேன். பிரிவினைவாதிகளை பேச்சுக்கு அழைப்பது குறித்து அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டேன். அவற்றை எல்லாம் இப்போது செய்ய முடியுமா? ஒரு முதல்வராக பொறுப்பேற்றாலும் எதையும் செய்ய முடியாவிட்டால், அதனால் என்ன பயன்?
கடந்த 2002ல் பொடா சட்டத்தை ரத்து செய்வோம் என்றோம். எல்லைக் கட்டுப்பாடு கோடுகளை திறப்போம் என சொன்னோம். இவற்றையும் நாங்கள் செய்து முடித்தோம்.
மக்கள் ஆதரவின் அடிப்படையிலும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாக 370வது சட்டப்பிரிவு உள்ளது. அதை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம்.
மாநிலத்தின் முதல்வராக நான் பதவியேற்றாலும், மத்திய அரசின் சார்பில் செயல்படும் துணை நிலை கவர்னரையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அதனால், கட்சியின் கொள்கையான, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதை நிறைவேற்ற முடியாது என்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.