/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் சர்க்கரை ஆலையில் கரும்பு கிரய தொகை ரூ.23.40 கோடி நிலுவை: கடன் பெற்று வழங்க கோரிக்கை
/
மோகனுார் சர்க்கரை ஆலையில் கரும்பு கிரய தொகை ரூ.23.40 கோடி நிலுவை: கடன் பெற்று வழங்க கோரிக்கை
மோகனுார் சர்க்கரை ஆலையில் கரும்பு கிரய தொகை ரூ.23.40 கோடி நிலுவை: கடன் பெற்று வழங்க கோரிக்கை
மோகனுார் சர்க்கரை ஆலையில் கரும்பு கிரய தொகை ரூ.23.40 கோடி நிலுவை: கடன் பெற்று வழங்க கோரிக்கை
ADDED : மார் 01, 2025 03:54 AM
நாமக்கல்: 'மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, கிரய தொகை, 23.40 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அவற்றை அரசிடம், வழிவகை கடன் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை-தீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:நல்லாகவுண்டர், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்: தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. கரும்பு நடவு செய்வதற்கு, நான்கடி பார் அமைப்பதற்கு, சொட்டுநீர் பாசனம் அமைக்கின்றனர். அதற்கு மானியம் வழங்க வேண்டும்.
ராஜேந்திரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பால் உற்பத்தியா-ளர்கள் நலச்சங்கம்: பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், 'பால் விலை உயர்த்தினால், விற்பனை விலை உயர்த்த வேண்டும். அதனால், நுகர்வோர் பாதிக்கப்ப-டுவர். எங்களுக்கு சட்டசபை தேர்தல்தான் முக்கியம்' என, துறை அமைச்சர் தெரிவிக்கிறார். எங்கள் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
சண்முகம், ஆவின் பொது மேலாளர்: இந்த கோரிக்கை அர-சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசின் பரிசீலனையில் உள்ளது.
பாலசுப்ரமணியம், பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்: மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 2023-24 அரவை பருத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, கிரய தொகை (கொள்முதல் தொகை) 23.40 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அரவை முடிந்து, நான்கு மாதமாகியும் வழங்காததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லாபத்தில் இயங்கிய சர்க்கரை ஆலை, 23 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்-ளது. விவசாயிகளுக்கு கிரய தொகை வழங்க, அரசிடம் வழி வகை கடன் பெற்று உடனடியாக வழங்க வேண்டும். வண்டல் மண் எடுக்க தாசில்தார் அனுமதி அளித்தும், அந்த ஆர்டரை, பி.டி.ஓ., கிடப்பில் போட்டுள்ளார்.
சுமன், டி.ஆர்.ஓ.,: இது சீரியசான இஸ்யூஸ். உடனடியாக நட-வடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க விண்ணப்-பிக்கும் மனுக்கள் எதுவும் நிராகரிக்கக்கூடாது. தாசில்தார் உத்த-ரவை நிறுத்தி வைக்க யார் அனுமதி அளித்தது. உடனடியாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.