sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

/

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை


ADDED : ஆக 10, 2024 06:55 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: குடும்ப பிரச்னை காரணமாக, இரண்டு குழந்தைகளின் தாய் தீக்கு-ளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் அடுத்த தும்மங்குறிச்சியை சேர்ந்தவர் மோனிஷா, 25. இவருக்கும்,

என்.கொசவம்பட்டியை சேர்ந்த உறவினர் வெங்க-டேஷூக்கும், 2017ல் திருமணம் நடந்தது. வெங்கடேஷ், ஹரி-யானா மாநிலம், பாணிப்பட்டில் லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வரு-கிறார். தம்பதியருக்கு, 4 வயதில் ஒரு பெண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். மோனிஷாவின் மாமனார், கடந்த வாரம் நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்-டியில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து, வெங்கடேஷ், குடும்பத்தினருடன் கொசவம்பட்டிக்கு வந்-துள்ளார்.

துக்க நிகழ்ச்சியின்போது, கணவன், மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு, மோனிஷா தன் குழந்தைகளுடன், தும்மங்கு-றிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நி-லையில், நேற்று முன்தினம் இரவு, மாமியார் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், நாளை (நேற்று) வந்து அழைத்துச்செல்வதாக, மோனிஷாவிடம் கூறிச்சென்றார். நேற்று காலை, மோனிஷாவின் தாயார் வேலைக்கு சென்றுவிட்டார். காலை, 11:30 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, குழந்தைகளை பக்கத்து-வீட்டில் விட்டுவிட்டு, குளித்துவிட்டு வருவதாக கூறிச்சென்றார்.

பின், வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்ட மோனிஷா, கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வீட்டுக்குள் இருந்து புகை வெளி-யேறுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று மோனிஷாவை மீட்பதற்குள் அவர் உடல் கருகி உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்-சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us