/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைப்பு

ADDED : ஆக 24, 2024 01:18 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி, 23வது வார்டு கொங்கு நகரில், ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், எம்.பி., ராஜேஸ்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதையேற்று, தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
தொடர்ந்து, ஐந்து மாதத்துக்கு முன், கட்டுமானப்பணி துவங்கி, முடிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ரேஷன் கடை திறப்பு விழா, நேற்று நடந்தது. மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார், புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.